ரூ.57 கோடி வங்கி மோசடி: பாஜக தலைவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

0

ரூ 57 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்ட மும்பை பாஜக தலைவர் மோகித் கம்போஜ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

அவியான் ஓவர்ஸீஸ் பிரைவேட் லிமிடட் நிறுவன நிர்வாக இயக்குநர் மோகித் பேங்க் ஆஃப் இந்தியாவில் பெற்ற கடனை திருப்பி அடைக்காமல் அந்த தொகையில் மோகித் நிறுவன நிர்வாக இயக்குநர் பெயரில் பிளாட் ஒன்று வாங்கியிருப்பது வங்கி நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. முன்னதாக இந்த தொகையை வாராக்கடன் பட்டியலில் வங்கி சேர்த்திருந்தது.

இந்நிலையில் அவியான் ஓவர்ஸீஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர்கள் ஒவ்வொருவராக ராஜினாமா செய்துள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும் மோகித் கம்போஸ் நிறுவன இயக்குநர்கள் பெற்ற தொடர் கடனால் பேங்க் ஆஃப் இந்தியாவிற்கு ரூ 57.22 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து மோகித் கம்போஜ் இல்லம் மற்றும் நிறுவனங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இதில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Comments are closed.