மக்கள் கை தட்டுவதும், டார்ச் அடிப்பதும் கொரோனாவுக்கு தீர்வாகாது -ராகுல் காந்தி

0

பரிசோதனைகளை மேற்கொள்ளாமல் மக்களை கை தட்ட வைப்பதும், விளக்கேற்ற வைப்பதும் கொரோனாவுக்கு தீர்வு ஆகாது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய்க்கு எதிராக இந்தியர்களும் அனைவரும் இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீடுகளில் விளக்கு, மெழுகுவர்த்தி மற்றும் டார்ச், செல்போன் விளக்குகளை எரிய விடுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பொதுமக்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், உலக நாடுகள் மேற்கொள்ளும் கொரோனா பரிசோதனை தொடர்பாக புள்ளிவிவர படத்துடன் பதிவிட்டு அதில், கொரோனா வைரஸை தீர்வுக்குள் கொண்டுவர இந்தியா போதுமான வகையில் பரிசோதனையை மேற்கொள்ளவில்லை. மக்கள் கை தட்டுவதாலும், டார்ச், விளக்கை எரியவிட செய்வதாலும் பிரச்சனை தீர்ந்து விட போவதில்லை என்றார்.

 

Comments are closed.