கொல்கத்தாவில் கொரோனாவை தடுக்க கோமியம் வழங்கிய பாஜக தலைவர் கைது

0

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 147 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திக்குமுக்காடி வரும் நிலையில், இந்தியாவில் இந்துத்துவாவினர் கொரோனா  அழிக்க மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இதில் பலரும் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களாகும்.

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் மாட்டுச்சாணம், கோமியம் போன்றவற்றை பயன்படுத்தினால் கொரோனா தாக்காது சிறுபிள்ளைத்தனமாக மக்கள் மத்தியில் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதனிடையே கொல்கத்தாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலருக்கு கோமியத்தை கொடுத்ததற்காக கொல்கத்தா பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தா பாஜக நிர்வாகியான நாராயணன் சாட்டர்ஜி என்பவர் கோமியம் குடிக்கும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் கொரோனா பாதிப்பு வராமல் தடுக்க அனைவரும் பசுவின் கோமியத்தை குடிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் பாதுகாப்பு வழங்குவதற்காக கலந்துகொண்ட காவலருக்கு  வலுக்கட்டாயமாக கோமியம் குடிக்க வைத்துள்ளார். மேலும்  பாட்டில்களில் கோமியத்தை அடைத்து விற்பனையும் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர் பாஜக தலைவர் நாராயணன் சாட்டர்ஜி மீது காவல் நிலையத்தில் தனக்கு வலுக்கட்டாயமாக மாட்டு கோமியம் வழங்கப்பட்டதாக புகார் அளித்தார்.

அந்த புகாரை அடுத்து போலிஸார் பாஜக பிரமுகர் நாராயணன் சாட்டர்ஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது சிறையில் அடைத்தனர்.

Comments are closed.