டிரம்ப் வருகையால் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற பாஜக அரசு உத்தரவு

0

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகருக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரும் 24ஆம் தேதி வருகை தரவுள்ள நிலையில், அந்நகரில் சாலையையொட்டியுள்ள குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்றும் பணி நடைபெறவுள்ளது.

டிரம்ப் வருகையால் அப்பகுதியில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவர் செல்லவிருக்கும் பகுதியில் குடிசையில் வசிக்கு மக்களை மறைப்பதற்காக பெரிய சுவர் மும்முரமாக எழுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அகமதாபாதின் மோதிரா மைதானத்திற்கு அருகே குடிசை பகுதிகளில் உள்ள மக்களை வெளியேற்ற மாநகராட்சி நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், ‘அடுத்த 7 நாள்களுக்குள் குடிசைப் பகுதிகளை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில் அங்கு வசிக்கும் மக்கள் மீது கடும் எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெரிவித்த குடிசை பகுதி மக்கள், “கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த பகுதியில் வசித்து வருகிறோம். இதற்கு முந்திய காலங்களில், இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு யாரும் நோட்டீஸ் அனுப்பியதில்லை. திடீரென்று வெளியேற சொன்னால் நாங்கள் எங்கு செல்வோம். எங்களுக்கு வேறு இடமும் கிடையாது” என்றனர்.

இந்த உத்தரவுக்கும், டிரம்ப் வருவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. திட்டமிட்ட நகரம் சட்டத்தின்படி, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் குடிசைவாசிகளை  காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

Comments are closed.