இந்திய பொருளாதாரம் சரிந்தும் ரூ.2,410 கோடி சம்பாதித்த பாஜக

0

கடந்த ஆண்டு இறுதில் பாஜக கட்சி 800 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவியில் சேர்த்தது. இதில் டாடா குழுமம் மட்டும் தனித்து 356 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியது. எதிர்கட்சியான காங்கிரஸ் வெறும் 146 கோடி ரூபாய் மட்டுமே நிதி வைந்திருந்தது.

பாஜக அரசு  தனியாருக்கு ஆதரவாக பல நலன்களை செய்வதால் அதனின் பிரதிபலிப்பாக அக்கட்சிக்கு தனியார் நிறுவனங்ககே அதிக அளவிலான நிதியுதவி வழங்கி வருகின்றது. ஆனால் இதனை முற்றிலும் மறுத்துள்ளது பாஜக.

தற்போது பாஜக-வின் மொத்த வருமானம் குறித்தும், தேர்தல் வரவு-செலவு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பாஜகவின் மொத்த வருமானம் 2,410 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

முந்தைய ஆண்டில் பா.ஜ.க-வின் வருமானம் சுமார் 1,027 கோடி ரூபாயாக இருந்ததுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட 134 சதவீதம் அதிகமாகும்.

Leave A Reply