பாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் ரூ.94.62 லட்சம் கோடி அதிகரிப்பு

0

மத்திய பாஜக அரசின் ஒட்டுமொத்த கடன் கடந்த ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நான்காவது காலாண்டில் ரூ.94.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 0.8 சதவீதம் அதிகமாகும்.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் ஒட்டுமொத்த கடன் பொதுக் கணக்கின் கீழ் வரும் வருங்கால வைப்பு நிதி உள்பட மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ரூ.94.62 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டின் இறுதியில் ரூ.93.89 லட்சம் கோடியாக இருந்தது.

மத்திய அரசின் ஒட்டுமொத்த கடனில் 90.9 சதவீதமானது அரசுப் பத்திரங்களை விற்ன் மூலமாக மட்டும் பெறப்பட்டுள்ளது. அதிலும் ஓராண்டுக்கு குறைவாக முதிர்வு கொண்ட பத்திரங்கள் 3.9 சதவீதமாக உள்ளன. இது கடந்த 2019-20-ஆம் நிதியாண்டின் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் 6.64 சதவீதமாக இருந்தது.

1 முதல் 5 ஆண்டுகள் வரை முதிர்வு கொண்ட பத்திரங்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் 25.09 சதவீதமாக இருந்தன. மத்திய அரசு விற்பனை செய்த பத்திரங்களில் 40.4 சதவீதத்தை வங்கிகளே வாங்கியுள்ளன. காப்பீட்டு நிறுவனங்கள் வசம் 24.3 சதவீத அரசு பத்திரங்கள் உள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply