கொரோனாவை விட பாஜக தான் மோசமான வைரஸ் -மம்தா பானர்ஜி

0

கோவிட்-19 என்பதைவிட பாஜக தான் மிகவும் ஆபத்தான வைரஸ் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

“மக்களுக்கான அரசை நடத்துவதற்கு பதிலாக, சர்வாதிகார ஆட்சியை பாரதீய ஜனதா கடை நடத்திவருகிறது என்றும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித்துகளுக்கு எதிரான ஒரு அரசை நடத்தி வருகிறது. கோவிட்-19ஐ விட கொடிய வைரஸ்தான் பாரதீய ஜனதா.

மனிதாபிமானமே எனது ஜாதி என்பதால், நான் கடைசி கட்டம் வரை தலித்துகளின் பக்கம் நிற்பேன். ஜாதி மற்றும்மதத்தின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை” என்றார் மம்தா

Comments are closed.