குஜராத் கலவர வழக்கு: மோடியை விடுவித்த நீதிமன்றம்

0

குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் பிரந்திஜ் தாலுகா நீதிமன்றத்தின் முதன்மை மூத்த சிவில் நீதிபதி எஸ்.கே.காத்வி மூன்று வழக்குகளில் மோடியை தப்பிக்க வைத்துள்ளார். மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொதுவானவை மற்றும் தெளிவற்றவை. கலவர நடந்த இடத்தில் அப்போதைய குஜராத் முதலமைச்சர் மோடி இருந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லை என்று நீதிபதி காரணம் காட்டியுள்ளார்.

2002ஆம் ஆண்டு இம்ரான் தாவூத், சயீத் தாவூத், ஷக்கீல் தாவூத் மற்றும் முகமது அஸ்வத் கியோர் ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது குஜராத் மாநிலம் சபர்காந்தா மாவட்டத்தில் உள்ள பிரந்தீஜ் அருகே உள்ள தங்கள் சொந்த கிராமமான லஜ்பூருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அங்கு இந்துத்துவ பயங்கரவாத கும்பல் அவர்களை வழி மறித்து அவர்களது வாகனத்திற்கு தீ வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தில் சயீத் மற்றும் அஸ்வத் ஆகியருடன் வாகன ஓட்டுநர் யூசுப்பும் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக நீதி கேட்டு கொல்லப்பட்ட அப்பாவிகளின் உறவினர்கள் சிவில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் அவர்கள் அப்போதைய குஜராத் முதல்வர் மோடியே காரணம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

இஅதபை அடித்து செப்டம்பர் 5ஆம் தேதி தாலுகா நீதிமன்றம் உத்தரவில், “குற்றம் சம்பந்தப்பட் இடத்தில் மோடி இருந்தற்கான எவ்வித ஆதாரமும் இல்லை. அச்சம்வத்தின்போது அவர் மறைமுகமாக ஈடுபடுகிறார் என்பதற்கான ஆதாரம் கூட இல்லை.

கோத்ரா வன்முறை சம்பவங்களுடன் மோடியை இணைக்கவும், அதன் மூலம் மோடியை குற்றவாளியாக மாற்ற அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.”

எனது பார்வையில், “இத்தகைய பொறுப்பற்ற குற்றச்சாட்டுகள் மோடிக்கு எதிராக எந்தவொரு குற்ற தொடர்பையும் ஏற்படுத்தவோ அல்லது நடவடிக்கைக்கான காரணத்தை எழுப்ப உதவ முடியாது” என்று நீதிபதி எஸ்.கே.காக்வி கூறியுள்ளார்.

Comments are closed.