ஃபேஸ்புக்கில் வெறுப்பு பிரச்சாரம்: பாஜக எம்.எல்.ஏ கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்

0

அமெரிக்காவின் வால் ஸ்டிரீட் ஜர்னல் பத்திரிகை எழுதி உள்ள ஆய்வு கட்டுரையில், பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் பாஜகவினர் செய்யும் வெறுப்பு பேச்சுக்களை நீக்குவது இல்லை. பாஜகவினர் செய்யும் போஸ்ட்களை கண்மூடித்தனமாக பேஸ்புக் ஆதரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாஜகவின் தலைவர்கள் செய்யும் வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக பேஸ்புக் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பலதரப்பிலிருந்தும் புகார் எழுந்து வருகிறது.

முக்கியமாக இந்தியாவின் பேஸ்புக் தலைவராக இருக்கும் அங்கி தாஸ் மீது அடுத்தடுத்து புகார்கள் வைக்கப்பட்டது. இவர் மோடிக்கு நெருக்கமாக இருப்பதால் பாஜகவுக்கு ஆதரவாக ஃபேஸ்புக்-ஐ இவர் நடத்தி வருவதாக போலீசில் புகாரும் அளிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான பாராளுமன்ற குழு ஃபேஸ்புக்கிற்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருந்தது. இது தொடர்பாக விளக்க கூட்ட விசாரணை நேற்று நடந்தது.

இந்நிலையில் ஃபேஸ்புக்கில் தொடர் வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வந்த தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. டி.ராஜா சிங்கிற்கு தடை விதித்து பேஸ்புக் உத்தரவிட்டுள்ளது.

இவரின் பேஸ்புக் கணக்கு நீக்கப்பட்டுள்ளதோடு, இனி இவர் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க முடியாது என்றும் கூறியுள்ளது. அதேபோல இன்ஸ்டாகிராமிலும் ராஜா சிங்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.