ஏழை மக்கள் கையில் பணத்தை கொடுங்கள் -பாஜக அரசுக்கு அபிஜித் பானர்ஜி வலியுறுத்தல்

0

கொரோனா நெருக்கடியிலிருந்து உடனடியாக மீள, ஏழைகளின் கைகளில் பணத்தை கொடுக்க வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் ஏற்பாடு செய்த கலந்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில் ஆன்லைன் மூலமாக அபிஜித் பானர்ஜி உரையாற்றினார்.

அதில், “இந்தியாவில் தற்போது கொரோனாவால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதை குறுகிய கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டுமானால் நாட்டிலுள்ள ஏழைகள் அனைவரின் கைகளிலும் தேவையான பணத்தை கொடுக்க வேண்டும். இதுதான் ஒரே வழி. இப்போது கொடுக்கப்படும் நிதியுதவி மிகவும் குறைவு. இது குறுகிய கால அடிப்படையில் தீர்வாக இருக்காது” என்று அபிஜித் கூறியுள்ளார்.

மேலும், “சமூக நலத்திட்டங்களில் உடனடியாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments are closed.