பாஜக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை கைவிட்டது கர்நாடக அரசு

0

கர்நாடக அமைச்சர் ஜே.சி.மதுசாமி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சி.டி.ரவி ஆகியோர் மீது சட்டமன்ற ஒழுங்கு நடவடிக்கை, கலவரம் செய்ய முயற்சித்தது போன்ற வழக்குகள் கைவிடப்பட்டுள்ளது.

அதேப்போல் காங்கிரஸ் இருந்து பாஜகவிற்கு சென்ற ஆனந்த் சிங் மீதான வழக்கும் கைவிடப்பட்டுள்ளது. ஆனந்த் சிங் மீது ஹாஸ்பெட் தாலுகா அலுவலகத்தைத் தாக்கியதற்காக 2017ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் குற்றவியல் மிரட்டல், அரசு ஊழியரைத் தாக்கியது, பொது சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

மேலும் மைசூரு எம்.பி. பிரதாப் சிம்ஹா மீதான வழக்கு நீக்கப்பட்டுள்ளது. பிரதாப் சிம்ஹா, கடந்த 2017ம் ஆண்டு ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின் போது அனுமதி இன்றி சென்றதால் அவர்களை தடுத்தற்காக காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில், மாண்டியா சுயாதீன எம்.பி. சுமலதா அம்பரிஷ், யெல்பர்காவை சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ, ஹொன்னல்லியை சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ மற்றும் முதல்வரின் அரசியல் செயலாளர் எம்.பி. ரேணுகாச்சார்யா ஆகியோர் மீது வழக்குகள் கைவிடப்படுகின்றன.

இந்த வழக்குகளை கைவிடும் முடிவிற்கு கர்நாடக மாநில டிஜி – ஐஜிபி மற்றும் அரசு வழக்கு மற்றும் சட்டத்துறை இயக்குநர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வழக்குகளில் இருந்து பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்களை தப்பிக்க வைக்க எடியூரப்பாவின் ஆட்சி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Comments are closed.