பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானியிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிமன்றம்

0

பாஜகவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்ததால் வீடியோ இணைப்பு மூலம் லக்னோவில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜரானார்.

4.5 மணி நேரம் நீடித்த விசாரணையின் போது, காலை 11 மணி முதல் பிற்பகல் 3:30 மணி வரை, 100க்கும் மேற்பட்ட கேள்விகள் அத்வானியிடம் நீதிமன்றத்தால் கேட்கப்பட்டன. இது குறித்து, “அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார்.” என அத்வானியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்நிலையில் புதன்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அத்வானியை சந்தித்து பேசியுள்ளார்.

இந்த விசாரணையை தினந்தோரும் நடத்தி இரண்டு ஆண்டுகளுக்குள் வழக்கை முடிக்கவும், நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பினை ஆகஸ்ட் 31க்குள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

பாபர் மஸ்ஜித் 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இந்துத்துவ பயங்கரவாதிகளால் இடிக்கப்பட்டது. இதில் சதித்திட்டம் தீட்டிய பாஜக தலைவர்களில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.