பஞ்சாப், ஹரியானா ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து விவசாயிகள் போராட்டம்

0

விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அடிமையாக்கும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் வெள்ளிகிழமை (நேற்று) பஞ்சாப் மாநில விவசாயிகள் ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 3 வேளாண் மசோதாக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், மாநிலத்தின் பல பகுதிகளில் தண்டவாளங்களில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இதனால் 28 முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அமிர்தசரஸ் நகரில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஹரியானா மாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed.