நேருவின் கொள்கை, குஜராத் கலவரம் உள்ளிட்ட பாடங்களை நீக்கியது பாஜக அரசு

0

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாடச் சுமையைக் குறைக்கவேண்டும் என பெற்றோர்களும், மாணவர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதன் காரணமாக அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு மாணவர்களின் பாடச்சுமையை குறைக்கவுள்ளோம் என்ற பெயரில் 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்திலிருந்து நாட்டுக்காக உழைத்த சில தலைவர்கள் பற்றிய பாடங்களை நீக்கியுள்ளது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடமும் தங்கள் பாசிச கொள்கைகளை திணிக்கும் வேலைகளில் பாஜக அரசு மும்முரமாக  ஈடுபட்டுவருகிறது.

இந்தியாவின் முதல் பிரதமரும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்தவருமான ஜவஹர்லால் நேருவின் தேசக்கட்டுமானம் பற்றிய அணுகுமுறை குறித்த பாடம், கொள்கை பாடம், நேருவுக்கு பிறகான ஆட்சி உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

மேலும், இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் குறித்த பாடம், அயோத்தி விவகாரம், குஜராத் கலவரம், 5 ஆண்டு திட்டங்கள் குறித்த பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

1986 தேசிய கல்விக்கொள்கையின் முக்கிய அம்சங்கள், பெண்களுக்கு சம உரிமை, சிறுபான்மையினர் உரிமைகள், சமூக மாற்றம், நிலசீர்த்திருத்தம், பழங்குடி இயக்கங்கள், முகலாயர்கள் பற்றிய பாடங்களும் நீக்கப்பட்டுள்ளன.

மதச்சார்பின்மை, குடும்பம், உறவு, வட இந்தியாவில் மதம், சாதி, காலனியாதிக்கம், வகுப்புகள், அரசு வருவாயில் குறைபாடு, அந்நிய செலாவணி மற்றும் வங்கிகளை தேசியமயமாக்கல் ஆகிய பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன.

கொரோனா பேரிடர் காலத்தில் பள்ளி மாணவர்களின் சுமையை குறைப்பதாக கூறி பாஜக அரசு, சமுதாய பாடங்களை பாட புத்தகத்திலிருந்து நீக்கியுள்ளதுடன் மாணவர்களின் பிஞ்சு மனதில் பாசிச கொள்கையை திணிக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.