சமூக வலைத்தள நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்களை மத்திய அரசு மிரட்டவில்லை என பாஜக அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக சமூக வலைத்தளத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பாஜக கட்சியின் ஆதரவாளர்கள் மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர், நாடாளுமன்றத்தில் அறிவித்தபடி, சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்கள் அரசையும் பிரதமரையும் அல்லது எந்தவொரு அமைச்சரையும் விமர்சிக்க முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் மத்திய அரசு வரவேற்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையை ஊக்குவித்தல், பரவலான வகுப்புவாத பிளவு, பயங்கரவாதத்தை தூண்டுவது போன்றவை கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும் மத்திய பாஜக அரசு வலியுறுத்தி உள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.