கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள மேற்குவங்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து பாஜக தொழில் நுட்பப் பரிவு தலைவர் அமித் மாளவியாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய மம்தா பனர்ஜி, பாஜகவின் தொழில் நுட்பப் பிரிவு மேற்கு வங்க மாநில சுகாதாரத்துறையை அவமானப்படுத்தும் வகையில் போலியான செய்திகளைப் பரப்பி வருகிறது. எங்களது மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறார்கள். இது அரசியல் செய்தவதற்கு உகந்த நேரம் அல்ல. இந்த மத்திய அரசின் குறைபாடுகளை நாங்கள் ஒருபோதும் சுட்டிக்காட்டவில்லை.
கொரோனாவை விரட்ட மணிகளை ஒலிக்கச் செய்வதிலும், பட்டாசுகளை வெடிக்கச் செய்வதன் மூலமாக அரசியல் நடத்துவதில் பாஜக அதிக அக்கறை காட்டக்கூடும். ஆனால் நாங்கள் அவ்வாறு இல்லை என்றார்.
மத்திய அரசின் தோல்விகளை மறைக்க பாஜக ஐடி விங் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய பாஜக அரசு ஆளும் மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளின் பணிகளை அவமனாப்படுத்தும் நோக்கில் இவ்வாறு செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டியுள்ளனர்.