“2 கோடி வங்கதேச முஸ்லிம்கள் இந்தியாவில் ஊடுருவியுள்ளனர்” -மேற்குவங்க பாஜக தலைவர்

0

இந்தியாவில் சட்டவிரோதமாக 2 கோடி வங்கதேச முஸ்லிம்கள் ஊடுருவியுள்ளதாக மேற்குவங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய திலிப் கோஷ், “வங்கதேசத்தைச் சேர்ந்த 2 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர். அவர்களில் 1 கோடி முஸ்லிம்கள் மேற்கு வங்கத்தில் உள்ளனர். இதர 1 கோடி பேர் நாடு முழுவதும் பிரிந்து கிடக்கின்றனர்.

வங்கதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம்களை இந்தியாவில் தங்க அனுமதிக்கப்போவதில்லை. ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டையில் அவர்கள் பெயர் இடம்பெற்றிருந்தால், நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவிரோதமாக ஊடுருவிய முஸ்லிம்களின் பெயர்கள் நீக்கப்படுவதன் மூலம் 2021 பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் வாக்கு வங்கி சரியும்.  இந்த தேர்தலில் பாஜக 200 இடங்களை கைப்பற்றப்போவது உறுதி, மம்தா பானர்ஜி 50 இடங்களைக் கூட பெறமாட்டார்” என்று தெரிவித்தார்.

Comments are closed.