ரூ.2000 கோடி ஊழல் வழக்கில் சிக்கிய பாஜக தலைவர்

0

முன்னாள் ஐ.டி அதிகாரியும், தற்போதைய சூரத் நகர பாஜக தலைவருமான பிவிஎஸ் சர்மா மீது, மோசடி மற்றும் பித்தலாட்ட குற்றத்தில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இரண்டு செய்தித்தாள்களுக்கு, அரசு மற்றும் தனியார் விளம்பரங்களைப் பெறுவதற்காக, அந்த செய்தித்தாள்கள் அதிகளவில் விற்பனையாகின்றன என்று பொய்யான ஆவணங்களைக் காட்டியதாக அவர் மீது புகார் பதியப்பட்டுள்ளது.

வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு துணை இயக்குநர் கே.டி.பம்மயாவால் இப்புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பின்போது, முறைகேட்டில் ஈடுபட்டதற்கு கடந்த மாதம் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை அடுத்து, பி.வி.எஸ் சர்மா வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளது.

Leave A Reply