“அறியாமையை விட ஆபத்தானது ஆணவம்” -பாஜக அரசை விமர்சித்த ராகுல் காந்தி

0

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 3 லட்சத்து 33 ஆயிரத்தைக கடந்துள்ளது. கொரோனா நோயால் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 9,524 ஆக உள்ளது. சில நாட்களாக தினமும் 10,000 என்ற அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மத்திய பாஜக அரசு நான்கு முறை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் தற்போதுதான் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

கொரோனா வௌரஸ் பரவுவதை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து விமர்சித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, கொரோனா தாக்கம் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அறியாமையை விட ஆணவம் ஆபத்தானது” என்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் தத்துவத்தை குறிப்பிட்டு, ஊரடங்கால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கொரோனா உயிரிழப்பு அதிகரிப்பதாகவும், கொரோனா பாதிப்பு தவறாக செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.