விவசாயிகள் பேரணியில் ஊடுருவிய பாஜகவினர்: வழக்குப்பதிவு செய்த காவல்துறை

0

ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையை முற்றுகையிட்டு சிலர் விவசாய கொடியேற்றினர். அது காலிஸ்தான் கொடி என்று இந்துத்துவ பாஜக ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்.

ஆனால் இந்த கலவர பின்னணியில் பாஜக ஆதரவாளரான நடிகர் தீப் சித்து இருப்பதாக விவசாய சங்கங்கள் குற்றம்சாட்டன. இந்நிலையில் தீப் சித்து பெயர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டது. இதில் பாஜக ஆதரவாளார் ரவுடியாக லகா சித்தனா பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐபிசி பிரிவுகள் 186 (பொது ஊழியர்களை பணியாற்றவிடாமல் தடுப்பது), 353 (அரசு ஊழியரை தாக்குதல்), 308 (அரசு ஊழியரை பணியாற்ற விடாமல் தாக்கி கொலை செய்ய முயற்சித்தல்), 152 (பொதுமக்களைத் தாக்குவது) 397 (கொள்ளை, அல்லது கொடுமை, மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தும் முயற்சி), மற்றும் 307 (கொலை முயற்சி) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.