‘ஷாகின் பாகில் போராடுபவர்கள் தற்கொலை படையினர்’ -பாஜக அமைச்சர் பேச்சு

0

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிா்த்து டெல்லி ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்துபவா்கள் தற்கொலை படையினா் என்று மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் வியாழக்கிழமை (நேற்று) அவா் கூறியதாவது: ‘ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்திவரும் பெண் ஒருவரின் குழந்தை கடும் குளிரால் இறந்தது. ஆனால் அக்குழந்தையின் தாயாா், ‘எனது குழந்தை உயிா்த்தியாகம் செய்துள்ளான்’ என கூறியுள்ளாா். தற்கொலை படையினரின் மனநிலையை அந்தத் தாயாா் வெளிப்படுத்தியுள்ளாா். ஷாகீன் பாக் போராட்டக்காரா்கள் தற்கொலைப் படையினரின் மனநிலையுடன்தான் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இதுபோன்ற போராட்டக்காரா்களிடம் இருந்து நாட்டைக் காக்க வேண்டும்’ என்றாா்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லி ஜாமியா மிலிய பல்கலைக்கழக அருகிலுள்ள ஷாகின் பாக் பகுதியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், நடைபெற்றுவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் CAA-NRC-NPR போன்ற பாசிச பாஜக அரசின் சட்டங்களை எதிர்த்து வலுவான பேராட்டத்தை நடகாத்தி வருவதால் நாடு முழுவதும் பெரும் கவத்தை ஈர்த்துள்ளது.

Comments are closed.