கொரோனா பாதிப்பில் இந்தியா: ரூ.880 கோடிக்கு இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கும் மோடி அரசு

0

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு, கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

இந்தியாவில் தற்போதைய போதுமான அளவில் பரிசோதனைக்கான மருத்துவ பொருட்கள் இல்லை என்றும் நாடு முழுவதும் 118 பரிசோதனை ஆய்வகங்களும், 15 ஆயிரம் நோயாளிகளை பரிசோதிக்கவும் மட்டுமே வசதி உள்ளது என்றும் நிதி ஆயோக்கின் சிறப்பு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுகாதாரத்திற்கு மத்திய பாஜக அரசு ஒதுக்கப்பட்டுள்ள நிதி என்பது குறைவே.

இந்த நிலையில் இந்திய ஆயுதப்படைகளுக்கு ரூ.880 கோடி மதிப்பில் இலகு ரக துப்பாக்கிகள் வாங்க மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம், இஸ்ரேல் ஆயுத விற்பனை நிறுவனம் இடையே ஒப்பந்தம் நடைபெற்றுள்ளது.

மொத்தம் 16,479 துப்பாக்கிகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் ஒப்புதலுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுதொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய அரசியல் துறையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியர் அச்சின் வனாய்க் கூறுகையில், “மருத்துவ்வத்திற்காம நிதியை ராணுவத்திறு மாற்றியது மிகவும் வேதனையளிக்கிறது. ஏற்கனவே போராட்ட்த்தில் உள்ள இந்திய பொருளாதாரம் தற்போது மேலும் சுமையை ஏற்படுத்தும். மோடி அரசு, இந்தியாவை இஸ்ரேல் போல் ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறது. ஆயுதங்கம் மூலம் தனது பலத்தை அதிகரித்து மக்களை ஒடுக்க முணைப்பு காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.

பாஜகஅரசின் இந்த நடவடிக்கை எதிராக பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.