ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம்? மோடியின் அடுத்த பொய்!

0

ஜனவரி 09, 2020 அன்று நடைபெற்ற நிதி ஆயுக் கூட்டத்தில் 40 க்கும் மேற்பட்ட பொருளாதார துறை சார்ந்த வல்லுநர்கள், நிதி ஆயுக் நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்காரி, பியூஸ் கோயல் ஆகியோர் பங்கு பெற்ற இந்த கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்றார். இந்த கூட்டத்தின் நிறையவாக பேசிய மோடி வரும் 2023 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடைய செய்ய இருப்பதாக கூறினார். ஆனால் இது மோடியின் இன்னொரு பொய்யான வாக்குறுதி மற்றும் பித்தலாட்டம் என்று எதிர் கட்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறி இருந்தனர்.

காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் கடந்த 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ( GDP) சராசரியாக 8.1% வளர்ச்சி அடைந்த நிலையில் இருந்தது. இந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இரண்டு நிதி ஆண்டில் (2007-08) மற்றும் (2010-11) பொருளாதார வளர்ச்சி 10% க்கும் அதிகமாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சியை பிடித்த பா.ஜ.க., ஆட்சியின் முதல் நாள் முதல் இன்று வரை நாட்டுடைய பொருளாதார வளர்ச்சிக்கும் நாட்டு மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எந்த விதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள்தான் இப்பொழுது இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றப்போவதாக கட்டுக்கதைகளை கூறுகிறைனர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு எடுத்த இரண்டு மிகப்பெரிய தவறான நடவடிக்கைகள் ஒன்று Demonitization மற்றொன்று GST. இந்த இரண்டு நடவடிக்கைகளால் ஏழைகளும் நடுத்தர மக்களும் பெரும்பான்மையாக பாதிக்கப்பட்டனர். பா.ஜ.க.வின் இந்த இரண்டு நடவடிக்கைக்கு பிறகு நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிந்துக்கொண்டு போவதை பின்வரும் புள்ளி விவரங்கள் மூலம் நம்மால் தெளிவாக தெரிந்து கொள்ள முடியும்.
நாட்டின் கடந்த இரண்டு ஆண்டுகால GDP யின் வளர்ச்சி விகிதம் (காலாண்டு வாரியாக )

நிதி ஆண்டு // வளர்ச்சிவிகிதம்

2018- 19 (Q1) // 8.2%
2018-19 (Q2) // 7.1%
2018-19 (Q3) // 6.6%
2018-19 (Q4) // 5.8%
2019-20 (Q1) // 5.0%
2019-20 (Q2) // 4.5%
2019-20 (Q3) // 4.7%
2019-20 (Q4) // 3.1%

கடந்த 8 காலாண்டுகளாகவே நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது நமக்கு இதன் மூலம் தெளிவாக தெரிகிறது. இதற்கிடையில் மத்திய நிதி அமைச்சகம் சார்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் 2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான பொருளாதார வளர்ச்சி 2.1% ஆக இருக்கும் என்ற திட்ட வரைவை தயார் செய்து ரிசர்வ் வங்கியிடம் அளித்தனர். அந்த திட்ட வரைவை ரிசர்வ் வங்கி நிராகரித்து விட்டது. மேலும் ரிசர்வ் வங்கியின் கணிப்பின் படி இந்த நிதி ஆண்டின் பொருளாதார வளர்ச்சி எதிர் மறையாக (Negative Growth) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டை இது போன்ற மோசமான பொருளாதார சூழ்நிலையில் வைத்துக்கொண்டுதான் பிரதமர் நரேந்திர மோடி வாய் கூசாமல் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக வளர்ச்சியடைய செய்யப்போவதாக பொய் சொல்லிக்கொண்டு நாட்டு மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்.

5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை, இந்தியா இன்று இருக்கக்கூடிய வளர்ச்சி விகிதத்தில் (4% -FY 2020-21) இருந்து வரும் 2024 க்குள் அடைய வேண்டும் என்றால் நாட்டுடைய சராசரி பொருளாதார வளர்ச்சி 12% சதவிகிதத்திற்கு மேலாக இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆகும். இந்த சராசரி 12% பொருளாதார வளர்ச்சிக்கு மோடி அரசாங்கத்திடம் எந்த விதமான ஆக்கப்பூர்வமான திட்டங்களும் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

-சலீம்

Comments are closed.