பாஜகவின் ரூ.20 லட்சம் கோடி அறிவிப்பில் ஏழைகளுக்கு 1 ரூபாய் கூட இருக்காது -ப.சிதம்பரம்

0

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிரகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச்-24 தொடங்கிய ஊரடங்கை 3 வது கட்டமாக மே17 வரை நீடித்துள்ளது மத்திய பாஜக அரசு.

இந்நிலையில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டு நாட்களுக்கு முன்னதாக அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்கான திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

மாநிலங்கள் முழுவதும் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சீரழிந்துவரும் நிலையில், நிதி ஒதுக்கீடு எதுவும் அறிவிக்கப்படாமல் பாஜக அரசு ஏமாற்றி வருகிறது.

இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பா.சிதம்பரம் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது என விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ரூ.20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால், புலம் பெயர்ந்து நடந்தே வந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தரமாட்டார்கள்.

மக்கள் தொகையில் கீழ் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழை குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத்தர மறுக்கிறது. இந்த நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது” என பா. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Comments are closed.