கொரோனாவால் உயிரிழந்த கர்நாடக பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றிய PFI

0

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ) உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை கர்நாடகாவின் கங்காவதியில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பாஜக தலைவரின் இறுதி சடங்கை நிறைவேற்றினர்.

கர்நாடக கொப்பலின் கங்காவதியில் பாஜக தலைவர் சோமசேகர் கவுடா (54) ஞாயிற்றுக்கிழமை காலை கொரோனா வைரஸால் உயிரிழந்தார். அவரது சொந்த கட்சியான பாஜகவின் உறுப்பினர்கள் கொரோனா நோயின் பயம் காரணமாக அவரது இறுதி சடங்குக்கு வரவில்லை.

உயிரிழந்த பாஜக தலைவரின் மத மரபுகளின்படி இறுதி சடங்குகளை PFI உறுப்பினர்கள் நிறைவேற்றினர்.

ஊடகங்களுடன் பேசிய PFI-யின் மாவட்ட தலைவர் ஜாகீர் அப்பாஸ், கோவிட் -19 பற்றிய புரிதல் இல்லாத காரணத்தால், பாதிக்கப்பட்டவர்களின் இறுதி சடங்குகளை செய்வதிலிருந்து மக்கள் விலகி இருக்கிறார்கள் என்று கூறினார்.

PFI குழு அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி மறைந்த பாஜக தலைவரின் இறுதி சடங்குகளுக்கு அவரது மத நம்பிக்கைகள் மற்றும் அவரது குடும்பத்தின் ஒப்புதலுக்கு ஏற்ப உதவியது என்றார்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 100க்கும் மேற்பட்ட இறுதி சடங்குகளை PFI உறுப்பினர்கள் நாடு முழுவதும் செய்துள்ளனர்.

இந்நிலையில் PFI அமைப்பு இறந்தவர்களுக்கு கண்ணியத்தை அளிப்பதன் மூலம் தொடர்ந்து தனது சேவைகளை வழங்குகின்றது.

Comments are closed.