CAAக்கு எதிரான போராட்டக்காரர்களை ஒடுக்க பாஜக திட்டம்

0

CAA, NRC மற்றும் NPR போன்ற சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு மத்திய பாஜக அரசு குடியுரிமை திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக செயல்படத்துவங்கியுள்ளது என அறிவித்தது.

இது தொடர்பாக மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, “குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் தேசத்திற்கு எதிரான கருத்துகளை தெரிவித்தால், சிறையில் அடைக்கப்படுவார்கள். ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்திலும் தேசத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பியவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள்” இவ்வாறு மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் போலிஸார் தாக்குதல் நடத்தி வருவதோடு தனது இந்துத்துவ குண்டர்களை ஏவி போராட்டக்காரர்கள் மீது வன்முறையை நடத்த வைத்துள்ளாதாக பாஜக மீது சந்தேகம் எழுந்துள்ளது.

Leave A Reply