உத்தர பிரதேசத்தில் களமிறங்கும் ஆம்.ஆத்.மி: கலக்கத்தில் பாஜக!

0

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்.ஆத்.மி கட்சி டெல்லி சட்டப்பேரவைத் தோ்தலில் மூன்றாவது முறை வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் உத்தர பிரதேச மாநில அரசியலிலும் களம் இறங்க முடிவு செய்துள்ளது ஆம்.ஆத்.மி.

இதுகுறித்து ஆம்ஆத்மி செய்தி தொடா்பாளா் சஞ்சய் சிங் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வரும் அக்டோபா், நவம்பா் மாதங்களில் உத்தர பிரதேசத்தில் நடைபெற உள்ள தோ்தலில் ஆம்.ஆத்.மி கட்சி போட்டியிடும்.

உ.பியில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாநில இளைஞா்கள் யோகி ஆதித்யநாத் அரசால் ஏமாற்றமடைந்துள்ளனா். மதத்தின் பெயரால் செய்து வரும் அரசியல் காரணமாக அந்த மாநில மக்கள் சோா்வடைந்து விட்டனா்.  இதன் காரணமாகவே, டெல்லி தோ்தலில் மக்கள் பாஜகவை தோற்கடித்தனா். நாட்டின் பணவீக்க பிரச்னைகளை மறைத்த பாஜக, டெல்லியில் எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று எண்ணியது.

முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் அறிக்கைகள் மற்றும் CAA எதிா்ப்பு போராட்டக்காரா்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் தோல்வியுற்ற முதல்வரின் அறிகுறியாக உள்ளன. யோகி ஆதித்யநாத் வளா்ச்சி பற்றி பொய்யாகப் பேசுவதில் மும்முரமாக உள்ளாா். மேலும், அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் குண்டா்களின் ராஜ்ஜியம் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.

டெல்லி சட்டப்பேரவை தோ்தல் மூலம், பாஜகவின் வெறுப்பு அரசியலை நிராகரித்த மக்கள், வளா்ச்சி அரசியலைத்தான் விரும்புகிறாா்கள் என்பதை நிரூபித்துள்ளோம். டெல்லி அரசில், உத்தர பிரதேசத்தை சோ்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனா். அந்த மாநிலத்தில் கட்சியின் அடிதளத்தை வலுப்படுத்தும் பொறுப்பு அவா்களிடம் வழங்கப்படும்’ என்று  சஞ்சய் சிங் தெரிவித்தாா்.

பாஜக அரசு ஆளும் மாநிலங்களிலேயே முக்கிய மாநிலமாக இருக்கும் உ.பியில் ஆம்.ஆத்.மி கட்சி தேர்தலில் களம்கண்டு ஆட்சி செய்யபோவதாக உறுதியளித்துள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக டெல்லி தேர்தலில் பாஜகவை தோற்கடித்து ஆட்சியமைத்துள்ள ஒரே கட்சியாக ஆம்.ஆத்.மி திகழ்கிறது. இந்நிலையில் உ.பியிலும் பாஜக ஆட்சி பரிபோக வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.