‘பயங்கரவாதத்தை வளர்க்க ‘பாரத் மாதா கீ ஜெய்’ பயன்படுத்தப்படுகிறது’ -மன்மோகன் சிங்

0

மத்திய பாஜக ஆட்சியில் மீது மீது கொடூரத் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதலில் ஈடுபடும் வன்முறை கும்பல்கள் “பாரத் மாதா கீ ஜெய்” என கோஷமிடுகின்றனர்.

இதுகுறித்து, நேற்று டெல்லியில் நடைபெற்ற பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உரைகள் மற்றும் படைப்புகள் குறித்த புத்தகம் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘இன்றை நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்டவர் நேரு. ஆனால் இன்று அவரை தவறாக சித்தரிக்கிறார்கள். வரலாற்றை படிக்காமல் தங்களின் முடிவுகளின் அடிப்படையில் கருத்துகளை தெரிவிக்க முயற்சிகிறார்கள்.

அவர்கள், குற்றச்சாட்டுகளை நிராகரித்து, சரியானதை மட்டுமே எடுத்துக்காட்டும் வல்லமை வரலாறுக்கு உண்டு. எனவே இந்த நடவடிக்கையை உங்களால் தொடர முடியாது.

இந்தியாவில் பயங்கரவாத சிந்தனையை வளர்க்க, தேசியவாதமும், பாரத் மாதா கீ ஜெய் கோஷமும், தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது’ இவ்வாறு சிங் தெரிவித்தார்.

நாட்டில் பல்வேறு இடங்களில் இந்துத்துவ குண்டர்கள் முஸ்லிம்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகின்றது. அத்தாகுதல்கள் நாளுக்கு நாள் அதிகருத்துள்ளதே தவிர குறையவில்லை. முஸ்லிம்களை ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று கோஷமிட வற்புறுத்தி கொலை செய்தும் வருகின்றனர் இந்துத்துவா குண்டர்கள்.  ஆனால் அந்த கொலையாலிகள் மீது இதுவரை நடவடிக்கைகள் எடுத்தவாறு இல்லை.

Comments are closed.