“முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம்” -பாஜக எம்.எல்.ஏ விஷம பேச்சு

0

உலகம் முழுவதும் கொரோனா தாக்குதல் அதிகரித்து , உயிர் பலியும் லட்சத்தை கடந்து சென்றுக்கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலை எதிர்கொண்டு வருகிறோம். ஆனால், உத்தர பிரதேச மாநில பர்ஹஜ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ சுரேஷ் திவாரி முஸ்லிம்களிடம் இருந்து காய்கறிகள் வாங்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

அவர் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ”முஸ்லிம்களிடம் இருந்து யாரும் காய்கறிகள் வாங்கக் கூடாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்” என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

”நாட்டில் சவாலான சூழலை நாம் சந்தித்துக் கொண்டு இருக்கும்போதும், சுரேஷ் போன்றவர்கள் சமுதாயத்தில் வெறுப்புணர்வை வளர்த்து வருகின்றனர். இவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்” என்று சமாஜ்வாடி கட்சி செய்தி தொடர்பாளர் அனுராக் பஹ்தவ்ரியா தெரிவித்துள்ளார்.

தற்போது எம்.எல்.ஏ. சுரேஷுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

தொடர்ந்து நாட்டின் பல இடங்களில் முஸ்லிம்கள் மீது பாஜகவினர் மற்றும் சங்பரிவார்களும் தாக்குதல் மேற்கொண்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.