டெல்லி வன்முறை: வாட்ஸ்அப் குழுவில் திட்டமிட்டு, முஸ்லிம்களை கொன்று குவித்த இந்துத்துவ பயங்கரவாதிகள்

0

குடியுரிமை சட்டதை எதிர்த்து வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், கோகுல்புரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி ஜனநாயக முறையில் போராட்டம் தொடங்கியது. பிப்ரவரி 24ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் மீது பாஜகவின் கபில் முஷ்ரா தலைமையில் இந்துத்துவா கும்பல் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியது.

இந்துத்துவாவின் இந்த வன்முறையில் 53 பேர் பலியாகினர். 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் டெல்லியில் பல பகுதிகள் சூறையாடப்பட்டு, முஸ்லிம்களின் வீடுகள், மசூதிகள் உள்ளிட்டவைகளை குறிவைத்து இந்துத்துவ கும்பல்கள் தாக்குதல் நடத்தியது.

‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டபடி, இஸ்லாமியர்களின் வீடுகளை தேடிச்சென்று பெட்ரோல் குண்டுகளை வீசி, வீடுகளில் உள்ள பொருட்களை சேதப்படுத்தின. வடகிழக்கு டெல்லியில் 14க்கும் மேற்பட்ட மசூதிக்கள் ஒட்டுமொத்தமாக இந்துத்துவ வெறியர்களின் தாக்குதலுக்கு உள்ளாகியது.

இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை வெறியாட்டத்தின் போது 9 இஸ்லாமியர்களை கொன்றதாக லோகேஷ் சோலங்கி (19), பங்கஜ் ஷர்மா (31), அங்கித் சவுத்ரி (23), பிரின்ஸ் (22), ஜதின் ஷர்மா (19), ஹிமன்ஷு தாகூர் (19), விவேக் பஞ்சல் (20), ரிஷப் சவுத்ரி (20), சமித் சவுத்ரி (23) கடந்த ஜூன் 29ஆம் தேதி டெல்லி காவல்துறை குற்றப்பத்திரிகை ஒன்றினை பெருநகர மாஜிஸ்திரேட் வினோத் குமார் கவுதம் முன்னிலையில் தாக்கல் செய்துள்ளது.

அதில், ‘கட்டார் இந்து ஏக்தா’ என்ற வாட்ஸ்அப் குழுவை பிப்ரவரி 25ஆம் தேதி மதியம் 12.49 மணியளவில் உருவாக்கி, இஸ்லாமியர்களை பழிவாங்குவதற்காக திட்டமிட்டு, வடகிழக்கு டெல்லியில் வகுப்புவாத வன்முறையை இந்துத்துவ பயங்கரவாத கும்பல் நிகழ்த்தியது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடாத இஸ்லாமியர்களை கொடூரமாக தாக்கி கொலை செய்து கால்வாயிலும் வீசியுள்ளனர்.

பிப்ரவரி 25 ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் அமீன் என்பவர் பகிரதி விஹாரின் சி-பிளாக்கில் கொல்லப்பட்டு ஒரு வடிகாலில் வீசப்பட்டார். அதுபோல, பிப்ரவரி 26 அன்று காலை 10.30 மணிக்கு பூரே அலி என்பவர் அமீன் விசப்பட்ட அதே கால்வாயில் அவரையும் வீசியுள்ளனர். மேலும் ஹம்ஸா என்பவர் அதே நாள் இரவு 9.15க்கு கொன்று கால்வாயில் வீசியுள்ளார்.

இவ்வாறு, முர்சலின், ஆஸ் முஹம்மத், முஷரஃப், அகில் அகமது, மற்றும் ஹாஷிம் அலி மற்றும் அவரது மூத்த சகோதரர் அமீர்கான் ஆகிய 9 இஸ்லாமியர்களை இந்துத்துவ பயங்கரவாத கும்பல் திட்டமிட்டு கொன்றுள்ளது.

இதில் லோகேஷ் சோலங்கி என்பவன் தான் 2 முஸ்லிம்களை கொன்று வடிகாலில் வீசியதை அந்த வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளதாக குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்க ஜூலை 13ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.

Comments are closed.