ராகுல் காந்தி பேசினால் பாஜக-சிவசேனாவுக்கு வாக்கு அதிகரிக்கும்- பாஜக முதல்வர்

0

மகாராஷ்டிர மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் வரும் 21ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது.

யவத்மால் மாவட்டத்தில் உள்ள பவுசாத் நகரில் நேற்று பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் தேர்தல் பிரச்சாரம் செய்தார், அப்போது பசிய அவர்,

“ராகுல் காந்தி தனது தேர்தல் பிரச்சாரத்தில் மீண்டும் பழைய கதைகளையே பேசி வருகிறார். ரஃபேல் ஒப்பந்தம், ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு ஆகியவற்றைத்தான் மக்களிடம் கூறி வருகிறார்.

மக்களவை தேர்தல் பிரச்சரத்திலும் ராகுல் இதை தான் பேசி வந்தார். ஆனால் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் மோசமான தோல்வியை சந்தித்தது.

ஆகவே ராகுல் காந்தி பிரச்சாரத்தில் பேசப்பேச பாஜக மற்றும் சிவசேனா வாக்குகள் அதிகரிக்கும்” இவ்வாறு பட்னாவிஸ் தெரிவித்தார்.

Comments are closed.