தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி இணைந்து ஆட்சி அமைக்கும் -பாஜக பொறுப்பாளார் பரபரப்பு பேச்சு

0

தமிழகத்தில் சட்டமன்றா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளருமான, சி.டி.ரவி, கர்நாடாகா மாநிலத்தில் உள்ள சிக்க மகளூரில் செய்திகளுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா, விரைவாக குணமடைந்து வருகிறார். அவரது சிறை தண்டனை முடிந்து, வரும், 27ஆம் விடுதலையாகிறார். அவரை புகழ்ந்தோ அல்லது ஆதரித்தோ அல்லது எதிராகவோ நாங்கள் பேச தயாராக இல்லை. அதேபோல, சசிகலாவை, அ.தி.மு.க-வினர் ஏற்றுக் கொள்வார்களா என்பதும் எனக்கு தெரியாது.

ஆனால், கடந்த, 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது, அதிமுக – பாஜக இணைந்தது. இந்த கூட்டணி தமிழக சட்டசபை தேர்தலிலும் தொடருகிறது. பாஜகவினர், அதிமுகவினரை நாடி செல்லவில்லை. அவர்கள் தான், எங்களை நாடி வந்துள்ளனர். இந்த முறை தமிழக சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால், தமிழகத்தில் பாஜக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் என்றார்.

தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவியின் பேச்சு அதிமுக தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

Comments are closed.