“வெளிநாட்டு தாயின் வயிற்றில் பிறந்தவர் தேசபக்தராக இருக்க முடியாது” -ராகுலை சாடிய பிரக்யா தாக்கூர்

0

மலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளியான சாத்வி பிரக்யா தாக்கூர் சிறையில் இருந்து வந்தார். உடல்நிலையை காரணம் காட்டி பிணையில் வெளியே வந்த பிரக்யா தாக்கூர் நாடாளுமன்ற தேர்தலில் போபால் தொகுதியில் வெற்றிபெற்றார். மேலும் இவர்மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுத மற்றும் வெடி பொருட்கள் சட்டம் ஆகியவற்றின் மீதான வழக்கு விசாரணைகள் நிலுவையில் உள்ளன.

தற்போது வெளிநாட்டுத் தாயின் வயிற்றில் பிறந்த ஒருவரால் எப்படி தேசபக்தராக இருக்க முடியும் என்று ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி பெயர்களை கூறாமல் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்துள்ளார் பா.ஜ.க.வின் எம்.பி பிரக்யா தாக்கூர்.

சாணக்யா, இந்த மண்ணில் பிறந்தவனால்தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும் என்றார். அப்படி பார்த்தால், வெளிநாட்டு பெண்ணிற்கு பிறந்தவர் எப்படி தேசபக்தராக இருக்க முடியும். உங்களுக்கு இரு நாடுகளின் குடியுரிமை இருந்தால் எப்படி தேசபக்தியை வெளிப்படுத்துவீர்கள்.

காங்கிரஸ் கட்சி, தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு எப்படி பேச வேண்டும் என்று தெரியவில்லை. அந்த கட்சிக்கு நெறி, கொள்கை, தேசபக்தி என்றும் எதுவும் இல்லை” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் தாக்கூர்.

பிரக்யாவின் சர்ச்சைக்குறிய குற்றச்சட்டுகள் குறித்து, மத்திய பிரதேச காங்கிரஸின் செய்தி தொடர்பாளர், “பிரக்யா தீவிரவாத வழக்கில் ஈடுபட்டுள்ளார். இப்படியான நேரத்தில் தன் மனநிலை போக்கையும் அவர் இழந்துள்ளார். பா.ஜ.க.வினர், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.