விவசாயிகளுக்கு ஆதரவாக ஹேஷ்டேக்: டிவிட்டருக்கு எச்சரிக்கை விடுத்த பாஜக அரசு

0

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் பாஜக அரசுக்கு எதிரான பிரச்சனையாக இருந்து வெளிநாட்டினரும் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட பேரணி தொடர்பாக டிவிட்டர் பக்கங்களில் மத்திய பாஜக அரசுக்கு எதிராகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக ஹேஷ்டேக்குகள் டிரெண்ட் ஆனாதால் டிவிட்டர் நிறுவனத்திற்கு பாஜக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டிவிட்டருக்கு பாஜக அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை எச்சரிக்கை  உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், நாட்டின் அமைதிக்கு சட்டம் – ஒழுங்கு பிரச்சனைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, இனப்படுகொலை நடப்பதாக டிவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் 250 டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. ஆனால் முடங்கிய சில மணி நேரங்களிலேயே கணக்குகள திரும்ப பயன்பாட்டுக்கு வந்தது. உத்தரவை மதிக்காவிட்டால் கடும் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று டிவிட்டருக்கு நிறுவனத்திற்கு அந்த அறிக்கையின் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளது பாஜக அரசு.

Comments are closed.