“CAA-வை எதிர்ப்பவர்கள் இந்தியர்கள் இல்லை-பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்”: கல்லூரி மாணவிகளை மிரட்டிய பாஜகவினர்

0

பெங்களூரு, கொரமங்கலாவில் உள்ள ஜோதி நிவாஸ் கல்லூரியில் பாஜக தொண்டர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்குமாறு கோஷமிட்டனர்.

பின்னர் கல்லூரி சுவற்றில் பாஜகவினர் “இந்தியா சப்போர்ட்ஸ் சிஏஏ” என்ற போஸ்டரை ஒட்ட, கல்லூரி மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

CAA சட்டத்தை எதிர்க்கும் “நீங்கள் இந்தியர்கள் அல்ல” என்று மாணவிகளிடம் பாஜகவினர் கோஷம் போட்டனர். மேலும் CAA மீதான உங்கள் பிரச்சினை என்ன? நீங்கள் என்ன கல்லூரி உரிமையாளரா?” என்றும் கேள்வி எழுப்பினர்.

இதனையடுத்து இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பாஜகவினர், CAA எதிர்ப்பவர்கள் “பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்று கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர்.

இதனால், மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்ககுள் அரசியலை நுழைக்காதீர்கள் என்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கல்லூரிகளை போர் மண்டலமாக மாற்றாதீர்கள். CAAவை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம். உங்கள் கருத்தை எங்கள் மீது திணிக்கப் பார்க்கிறீர்களா? என்று வாசகங்கள் அடங்கிய பதாகையை சுமந்து போராட்டம் நடத்தினர் மாணவர்கள்.

Comments are closed.