பாஜக அரசை எதிர்த்து மாற்றுக் கருத்து தெரிவித்தால் தேச விரோதியா? நீதிபதி அதிருப்தி!

0

பாஜக அரசின் தொடர்பான விவகாரத்தில் மாற்றுக் கருத்து தெரிவிப்போர் மீது தேச விரோதிகள் என முத்திரைக் குத்தப்படுவதாக உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா, “அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதன் மூலம், ஆட்சியாளர்கள் பெருபான்மையின் கருத்து மட்டுமே வைத்துக்கொண்டு சட்டம் கொண்டு வருகின்றனர். அதுபோன்று இயற்றக்கூடாது, சிறுபான்மைக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமை உள்ளது என்பதனை எண்ணவேண்டும்.

மாற்றுக் கருத்து தெரிவிப்போரை தேச விரோதிகள் என முத்திரைக் குத்தும் மோசமான போக்கும் நடைபெற்று வருவது கவலை அளிக்கிறது. சமூக வலைதளங்களில் மாற்றுக் கருத்து தெரிவிப்போர் கூட பலவகையாக தாக்குதலுக்கு ஆளாகின்றனர். அதனால் மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க அச்சப்படுகின்றனர். இந்த சூழல் ஆரோக்கியமானதல்ல.

அதாவது ஒருநபர் சட்டத்தை மீறாமல் எந்தவித வன்முறையும் தூண்டாமல் மற்றுக் கருத்தை கூற அவருக்கு உரிமை உண்டு. அரசியல் தலைவர்கள் மற்றும் ஜனநாயக அமைப்பினர் விமர்சிப்பது தேச துரோகம் ஆகாது. ” என்று நீதிபதி தெரிவித்தார்.

Comments are closed.