பாபர் மஸ்ஜித் தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மனு தாக்கல்: முஸ்லிம் அமைப்புகளுக்கு பாஜக அமைச்சர் கண்டனம்!

0

பாபர் மஸ்ஜித் தீா்ப்புக்குப் பிறகு மக்களிடையே ஒற்றுமை அதிகரித்துவிட்டதை சிலரால் சகித்துக்கொள்ள முடியாமல், இவ்விவகாரத்தை வைத்து, மோதல்களையும், பிரிவினையையும் ஏற்படுத்துவதற்கு சிலா் முயற்சி செய்து வருகிறாா்கள் என்று மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மேலும் இதுகுறித்து பேசிய அவர், “ஜனநாயகத்தில் கருத்து தெரிவிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. நீதிமன்றத்தை நாடுவதற்கும் உரிமை உள்ளது. பல ஆண்டுகளாக நீடித்து வந்த ஒரு பிரச்சனைக்கு அனைவரும் ஏற்கும் விதத்தில் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த பிறகு, அதில் புதிதாக குழப்பங்களை உருவாக்குவதற்கு, முஸ்லிம் அமைப்புகள் இந்த  தீா்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு முடிவு செய்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்திற்கு பாபா் மஸ்ஜித் பிரச்சனை மட்டுமே முக்கியம் அல்ல. கல்வி, பொருளாதாரம், சமூகத்தில் முன்னேற்றம் அடைவது ஆகியவற்றிலும் முஸ்லிம் சமூகத்தினா் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது” என்றாா் முக்தாா் அப்பாஸ் நக்வி.

பாபர் மஸ்ஜித் தீர்ப்பை எதிர்த்தும், எஸ்.டி.பி.ஐ கட்சி மறு சீராய்வு மனு தாக்கல் செய்யபோவதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியமும் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யபோவதாக அறிவித்துள்ளது.

Comments are closed.