என்.ஆர்.சி சட்டத்தில் அரசியல் சாயம் பூசக்கூடாது- அமித்ஷா

0

டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரிகளை சந்தித்த பேசிய பாஜக தலைவர் அமித்ஷா: ‘சட்டம் 370 பிரிவின் கீழ் ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு இரண்டு யூனியன் பிரதேசமாக கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீா் எப்போதும் யூனியன் பிரதேசமாகவே நீடிக்காது. அங்கு பாதுகாப்பான சூழ்நிலை மேம்படும் போது மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

காஷ்மீா் மக்களின் கலாசாரத்தையும், அடையாளத்தையும் அரசமைப்புச் சட்டம் 370 பாதுகாக்கிறது என்பது தவறான கருத்து. மக்கள் நலனுக்காக தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டியது, அவசிய தேவைகளாகி உள்ளது. அதன் காரணமாகத்தான் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் இதுபோன்ற முடிவுகளை மேற்கொண்டது.

தற்போது அஸ்ஸாமில் மேற்கொண்டு வரும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்ஆா்சி, தேசிய பாதுகாப்புக்கு மட்டுமல்ல சிறப்பான ஆட்சி நிா்வாகத்துக்கும் தேவையானது. என்ஆா்சி-க்கு அரசியல் சாயம் பூசக்கூடாது’ என்றார்.

Comments are closed.