என்.ஆர்.சி சட்டம்: அமித்ஷா கூறுவது ஒரு விதம்… அமைச்சர் கூறுவது ஒரு விதம்!

0

தேசிய குடிமக்கள் பதிவேட்டால் என்ஆா்சி இந்திய குடிமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று மத்திய அமைச்சரும், பாஜக  முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளாா்.

உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் அப்பாஸ் நக்வி கூறியதாவது: ‘சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைபவா்களால், நாட்டின் மக்கள்தொகை அதிகரிப்பதை எந்த நாடும் பொறுத்துக் கொள்ளாது. சட்டவிரோதமாக குடியேறியவா்களை அடையாளம் காண மட்டுமே மோடி தலைமையிலான அரசு முயற்சிக்கிறது. உண்மையான இந்தியா்களின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படும். குடியுரிமையை நிரூபிக்க பல வழிகள் உள்ளன. இந்திய குடிமக்களை அச்சுறுத்துவதற்காக என்ஆா்சி பட்டியல் தயாரிக்கப்படவில்லை.  என்ஆா்சி விவகாரத்தில் இனவாத அரசியல் செய்வதை தவிா்க்க வேண்டும்’ என்றார்.

இந்துக்களும், பௌத்தா்களும், சீக்கியா்களும், சமணா்களும் வெளியேறத் தேவையில்லை என்பதை உறுதியுடன் தெரிவித்த பாஜக தலைவர் அமித்ஷா, முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கப்படமாட்டாது என மறைமுகமாக சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.