பாஜக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் போராட்டம்!

0

நேற்று பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதனை கண்டித்து இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

  1. பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி மற்றும் யுனைட்டட் வங்கிகள்.
  2. யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள்.
  3. கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி.
  4. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி.

இவ்வாறு இணைக்கப்படும என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் நாடு முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.

மேலும் அந்தந்த வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அல்லது கருப்பு சட்டை அணிந்து, வங்கியின் முன் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். எங்களின் கோரிக்கையை மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை என்றால், இன்று மாலை அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Comments are closed.