அஸ்ஸாமை தொடர்ந்து ஹரியானாவிலும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்த பாஜக முடிவு!

0

(NRC) தேசிய குடிமக்கள் பதிவேடு, ஹரியானா மாநிலத்திலும் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஹரியானா மாநில முதல்வர் மனோகர் கட்டார் கூறும்போது, ‘அஸ்ஸாம் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் (NRC) தேசிய குடிமக்கள் பதிவேடு ஹரியானாவிலும் அமல்படுத்தப்படும். NRC விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி பல்லாவிடம் பேசினேன்’ என்றார்.

தற்போது முன்னாள் நீதிபதியும், முன்னாள் ஹரியாணா மாநில மனித உரிமைகள் ஆணையருமான பல்லாவை அவர் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் இத்தகவலை தெரிவித்தார், ஹரியானா முதல்வர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் குடிமக்கள் பதிவேட்டால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஹரியானா மாநிலத்திலும் குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.