தாமரை சின்னத்தை அழுத்தினால் பாகிஸ்தான் மீது அணுகுண்டு விழும்: போரை தூண்டும் பாஜக!

0

மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி சட்டமன்ற தேர்தலும், 24 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ், பாஜக, சிவசேனா,  தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகிறது.

இந்நிலையில் மும்பை தானே தொகுதியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மேத்தவுக்கு ஆதரவாக, உ.பி துணை முதலமைச்சர் கேசவ் மவுரியா நேற்று பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர், ‘ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கிய பின் நடக்கும் முதல் தேர்தல். வாக்கு இயந்திரத்தில் தாமரை சின்னத்தை அழுத்தினால் நரேந்திர மேத்தாவுக்கு நல்லது செய்வது மட்டுமின்றி, பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவதற்கு சமமாகும்.

உங்கள் வாக்கு நரேந்திர மேத்தாவுக்கு மட்டுமல்ல, பிரதமர் மோடியின் தலைமைக்கும் செல்லும்.

கடவுள் லட்சுமி தாமரை மலரில்தான் அமர்ந்துள்ளார். தாமரை சின்னம்தான் வளர்ச்சியின் அடையாளம். இவ்வாறு மவுரியா தெரிவித்தார்.

Comments are closed.