CAB-க்கு இஸ்லாமியர்கள் ஆதரவா? போலி ட்விட்டர் கணக்கு பயன்படுத்திய இந்துத்துவா கும்பல்!

0

அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் மக்கள், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக்கூடாது என வலியுறுத்தி ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, அதை திரும்ப பெற வலியுறுத்தி அஸ்ஸாம், திரிபுராவில் உட்பட வடமாநிலங்கள் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், சமூக ஊடங்கமான ட்விட்டரிலும் மத்திய அரசுக்கு எதிராக ஹேஷ்டாக் டிரெண்டானது. ஆனால் பெரும்பாலனோர் இந்த சட்டத்தை எதிர்க்கும் நிலையில், சமூக வலைதளங்களில் முஸ்லிம் பெயர்களை கொண்ட ஒரு சிலர் இந்த சட்டத்தை ஆதரிப்பதாக கருத்து பதிந்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு அளித்து கருத்து தெரிவிந்த அந்த ட்விட்டர் கணக்கை ஆங்கில ஊடகம் ஒன்று ஆய்வு செய்ததில், “அந்த ட்விட்டர் கணக்கில் பயன்படுத்தியது இந்து மதத்தவர் என்றும், பாஜக மற்றும் இத்துத்துவா கும்பலின் ஆதரவாளர்கள் என்றும் தெரியவந்தது.

இதனையடுத்து அந்த முஸ்லிம் பெயரில் இருந்து ட்விட்டர் கணக்கில் இயங்கி வந்தவர்களின் முந்தைய இந்துத்துவா ஆதரவு பதிவுகளை அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் இவர்கள் ஒரே இரவில் தங்களின் அடையாளங்களை மறைத்து இதுபோல மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

Comments are closed.