“ஃபோட்டோ சூட்டை நிறுத்திவிட்டு, நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள்”- மோடியை கலாய்த்த கபில் சிபல்

0

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றா அபிஜித் பானர்ஜி, இந்தியாவின் பொருளாதாரம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

“இந்தியப் பொருளாதாரம் மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. பாஜக அரசின் தங்களது தவறுகளை நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனெனில், பொருளாதார பின்தங்கிய நிலை மிக வேகமாக கடுமையாகி வருகிறது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் அபிஜித் பானர்ஜியின் கருத்தை சுட்டிக்காட்டி காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், பிரதமர் மோடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். “நாட்டின் பொருளாதார நிலை எவ்வளவு வேகமாக பின் நோக்கி செல்கிறது? என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அது வேகமாக வீழ்ச்சியை நோக்கி செல்கிறது என்பது மட்டும் உண்மை” என்று கூறியுள்ள கபில் சிபல், “பிரதமர் மோடி, நாட்டின் பொருளாதார நிலையை சீர்படுத்த புகைப்படங்கள் எடுப்பதைக் குறைத்துக்கொண்டு நாட்டின் மீது கவனம் செலுத்தினால் நல்லது” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.