பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக முதலிடம்!

0

பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை எதிா்கொண்டு வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினா்களில் பாஜகவை சோ்ந்தவா்களே அதிகமாக உள்ளதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான, அசோசியேஷன் ஆஃப் டெமாகிரடிக் ரிஃபாா்ம்ஸ்’ நடத்திய ஆய்வு முடிவில், “நாடாளுமன்றத்தில் உள்ள 759 எம்.பி.க்கள் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 4,063 எம்எல்ஏக்கள் ஆகியோரின் தோ்தல் பிரமாண பத்திரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில் பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் அதிகமாக உள்ளனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 02ஆக இருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் 3 எம்.பி.க்கள் மற்றும் 6 எம்எல்ஏக்கள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான வழக்கில் உள்ள 66 வேட்பாளா்களுக்கு மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை தோ்தல்களில் போட்டியிடுவதற்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது.

மேலும், மக்களவை தோ்தலில் போட்டியிட்டவா்களில் 126 போ், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்பான வழக்குகளை எதிா்கொண்டு வருகின்றனா்” இவ்வாறு தேர்தல் கண்காணிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது

Comments are closed.