பாஜக தேசிய பொதுச் செயலாளர் மீது மோசடி வழக்கு!

0

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதரராவ் மற்றும் 8 நபர்கள் மீது ஹைதராபாத்தில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய வர்த்தக துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு நிறுவனத்தில் தல்லா மகிபால் ரெட்டி என்பவரை தலைவராக நியமிப்பதாக கூறி 2.17 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சரூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏமாற்றப்பட்ட நபரின் மனைவி இப்புகாரினை ஒன்றை அளித்துள்ளார்.

இந்த வழக்கில் முரளிதர்ராவ் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இத் துறையின் அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் கையொப்பத்துடன் பணி நியமன ஆணையையும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களிடம் காட்டி பணத்தை பெற்றுச் சென்றதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

Comments are closed.