வேலையில்லா திண்டாட்டத்திலுள்ள இந்தியா 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது உண்மையா?

0

இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், எந்த புள்ளிவிவரப்படி 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறி வருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை கண்டறிய ஒரு புதிய சீரமைப்பை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக, எந்த புள்ளி விவரங்களை வைத்து கூறுவருகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

நாட்டில் போதிய வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருக்கு சூழலில் எப்படி 7 சதவீத வளர்ச்சியை அடைய முடியும்? ஆகையால் நாட்டின் சரியான வளர்ச்சி விகிதத்தை தெரிந்துக்கொள்ள புள்ளி விவரங்களை குழப்பமில்லாமல் கண்டறிந்து உறுதி செய்ய வேண்டியது அவசிமானது. இவ்வாறு கவர்னர் ரகுராம் ராஜன் குறினார்.

முன்னதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தான் இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறிவந்தார்.

அண்மையில் கூட புள்ளியியல் துறை வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த அறிக்கையை மத்திய அரசு திடீரென நிறுத்தி வைத்தது. இதற்கிடையே, மத்திய அரசு தவறான புள்ளிவிபரங்களை தாக்கல் செய்ய கட்டாயப்படுத்துவதாக 108 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூகவியலாளர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். புள்ளிவிபரங்களை மத்திய அரசுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் அளவுக்கு இதற்கு முன் எந்த அரசு அழுத்தம் கொடுத்ததில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.