மாநில அரசின் அனுமதியின்றி சிபிஐ விசாரணை நடத்த முடியாது -உச்சநீதிமன்றம் உத்தரவு

0

மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டுமானால், அம்மாநில அரசின் ஒப்புதல் பெற்றே விசாரணை நடத்த இயலும்  என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மத்திய பாஜக அரசு,  சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்புகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் பாஜக அரசு தங்களை எதிர்க்கும் கட்சிகள் மீது சிபிஐ-ஐ ஏவிவிட்டு விசாரணை என்ற பெயரில் தன் இஷ்டத்திற்கு அலக்கழித்து வருகிறது. பாஜக அரசின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளன.

இதன் காரணமாக பல மாநிலங்கள், சிபிஐ விசாரணைக்கு ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து இருப்பதுடன், மாநிலத்திற்குள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டுமென்றால், மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு டெல்லி மாநில அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில், டெல்லி சிறப்பு காவல் சட்டத்தின் பிரிவு 6இன் கீழ் மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ அந்த மாநிலத்திற்குள் விசாரணை நடத்த முடியாது. மாநில அரசு இந்த 6வது  பிரிவின் கீழ் சிபிஐ விசாரணைக்கு தடை விதித்துவிட்டால், சிபிஐ தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது. மாநில அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகே விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது.

ஏற்கனவே  கடந்த 2018ஆம் ஆண்டில் முதன்முதலாக டெல்லி சிறப்பு காவல் சட்டப்பிரிவு 6ஐ பயன்படுத்தி, ஆந்திராவுக்குள் சிபிஐ விசாரணை நடத்துவதற்கான அனுமதியை அப்போதைய சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்தது. அதை தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி அதே உத்தரவை பிறப்பித்தார். தற்போது காங்கிரஸ் ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சிவசேனா ஆளும் மகாராஷ்டிரா உள்ளிட்ட 8 மாநிலங்களில் சிபிஐ விசாரணைக்கான பொதுவான அனுமதியை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.