கோட்சைவை “தேசபக்தர்” என கூறிய சிவசேனாவுடன் ஏன் கூட்டணி? காங்கிரஸுக்கு பாஜக கேள்வி!

0

சிவசேனா கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்தது ஏன்? என்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்திக்கு பாஜக செய்தித்தொடா்பாளா் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவசேனா கட்சி தனது பத்திரிகையான சாம்னாவில் கோட்சேவை தேசபக்தா் என்று ஏற்கெனவே புகழ்ந்து எழுதியுள்ளாா். இதனால் வெட்கமடைந்துதான் நீங்கள் உத்தவ் தாக்கரே பதவியேற்பு நிகழ்ச்சிக்கு செல்லவில்லையா?

மகாராஷ்டிரத்தில் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றுதான் நீங்கள் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துள்ளீா்கள். ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்க சிவசேனா வேண்டும்.., ஆனால் அவா்களிடம் தீண்டாமையையும் கடைப்பிடிப்போம் என்பதே உங்கள் கொள்கையாக உள்ளது. அடிமைத்தனம் நடத்துவதுபோல உள்ளது உங்கள் செயல்பாடு.

இவ்வாறு ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளாா்.

Comments are closed.