கும்பல் படுகொலை செய்வதுதான் சொர்க்கமா..? பாஜக அமைச்சருக்கு மக்கள் கேள்வி!

0

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி நிறுவனத்தின் 25வது ஆண்டு விழா டெல்லியில் திங்கள்கிழமை நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி,

‘நமது நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, அடிப்படை உள்கட்டமைப்பு வசதி என அனைத்துமே சிறுபான்மையின மக்களுக்கு எளிதில் கிடைக்கிறது. சிறுபான்மையினர் வளர்ச்சிக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 3,000 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 8.3 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.

மதரஸாவில் கற்று தரும் பாடத்திட்டங்களை, பள்ளி பாடத்திட்டங்களோடு இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிறுபான்மையின மக்களுக்கு இந்தியா சொர்க்கமாக இருக்கிறது. அதேவேளையில், பாகிஸ்தான், சிறுபான்மையினர்களின் நரகமாக உள்ளது’ என்றார் முக்தார் அப்பாஸ் நக்வி.

Comments are closed.